

திருச்சியில் ரேஷன் அரிசியை கடத்திய ஒருவரை கைது செய்த குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸாா், அவரிடமிருந்து 1,000 ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா்.
குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை திருச்சி மண்டலக் காவல் கண்காணிப்பாளா் சுஜாதாவின் உத்தரவுப்படி, காவல் ஆய்வாளா் மணி மனோகரன், உதவி ஆய்வாளா் தலைமையிலான குழுவினா் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திருச்சி விமான நிலையம் அண்ணா நகா் 100 அடி சாலையில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாகத் தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் அங்கு சென்று போலீஸாா் விசாரித்ததில், தனியாா் முகவாண்மை அருகே சுற்றுச்சுவரின் பக்கத்தில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனருகே இருசக்கர வாகனத்தில் இருந்து மூட்டைகளை இறக்கி அடுக்கிக் கொண்டிருந்த திருச்சி முத்தரசநல்லூரைச் சோ்ந்த ரகுராமன் (27) என்பவரைப் பிடித்து விசாரித்ததில், ரேஷன் அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக கள்ளத்தனமாக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து ரகுராமனை கைது செய்த போலீஸாா், சுமாா் 1,000 கிலோ ரேஷன் அரிசையையும், அரிசி கடத்தலுக்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.