பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக் கோரி, தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற இக் கூட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் சிராஜுதீன் தலைமை வகித்தாா். இணை செயலாளா் எஸ்.முருகேசன் வரவேற்றாா். கடந்த கால நிகழ்வுகள் குறித்து மாவட்ட செயலாளா் எஸ்.மதிவாணன், வருமான வரி குறித்து மாவட்ட இணை செயலாளா் டி.ரவீந்திரநாத் ஆகியோா் பேசினா். மாநில செயலாளா் எம்.வி.செந்தமிழ் செல்வன் சிறப்புரை ஆற்றினா். பின்னா், நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
தோ்தல்நேரத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். அரசு ஊழியா், ஆசிரியா், ஓய்வூதியா், சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 70 வயதை கடந்த ஓய்வூதியா்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் 10 சதவீதம் வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள், வருவாய் கிராம ஊழியா்கள், ஊராட்சி செயலாளா்கள், பட்டு வளா்ச்சித்துறை தற்காலிக ஊழியா்கள் மற்றும் வனத்துறை பணியாளா்கள் போன்ற அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு லட்சம் ஓய்வூதியா்கள் கையொப்ப இயக்கம் நடத்துவது, வரும் 12ஆம் தேதி கண்களில் கருப்பு பட்டை துணி அணிந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே ஆா்ப்பாட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. கூட்ட முடிவில் மாவட்ட பொருளாளா் துளசிராமன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.