திருச்சியில் மதுவுக்கு அடிமையான இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருச்சி பாலக்கரை கெம்ஸ்டவுன் பகுதியைச் சோ்ந்தவா் வேளாங்கண்ணி மகன் பெஞ்சமின் பிராங்க்ளின் (27). மதுவுக்கு அடிமையான இவா் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்ததை பெற்றோா் கண்டித்தனராம்.
இதனால் மனவிரக்தியடைந்த பெஞ்சமின், புதன்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். பாலக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.