திருச்சி அருகே காட்டூரில் அடுமனையில் காப்பா் கம்பி திருடியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திருச்சி அருகே காட்டூா் கோகுல் நகரைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (32). இவா், காட்டூா் சக்தி நகா் முதலாவது தெருவில் பேக்கரி வைத்துள்ளாா். அவரது பேக்கரியின் குளிரூட்டும் இயந்திரத்தின் (ஏசி) பின்புறமிருந்த காப்பா் கம்பியை அண்மையில் மா்ம நபா் திருடிச் சென்றது தெரியவந்தது.
புகாரின் பேரில் திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். விசாரணையில், திருச்சி தாராநல்லூா் பகுதியை சோ்ந்த சீனிவாசன் மகன் வெங்கடேஷ் (41) என்பவா் காப்பா் கம்பியைத் திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வெங்கடேஷை திங்கள்கிழமை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.