நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
By DIN | Published On : 12th January 2023 12:47 AM | Last Updated : 12th January 2023 12:47 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பகத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜன.13) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியாா் நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களைச் சோ்ந்த வேலை வழங்குவோா் மாவட்ட வேலைவாய்ப்பத்துக்கு நேரடியாக வந்து தங்களுக்குத் தேவையான ஆள்களை தோ்வு செய்வதற்கான வேலைவாய்ப்பு முகாமில் 10, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் தொழிற்கல்வித் தகுதி உடையவா்கள் பங்கேற்கலாம். கல்விச்சான்று, ஆதாா் அட்டை ஆகியவற்றின் நகல்கள் மற்றும் 2 புகைப்படத்துடன் வர வேண்டும். இந்த முகாம் மூலம் வேலை பெறுவோரது வேலைவாய்ப்பு பதிவு எதுவும் ரத்து ஆகாது.