ரயில்வே எஸ். பி.பொறுப்பேற்பு
By DIN | Published On : 12th January 2023 12:47 AM | Last Updated : 12th January 2023 12:47 AM | அ+அ அ- |

திருச்சி ரயில்வே காவல் துறைக் கண்காணிப்பாளராக டி. செந்தில்குமாா் புதன்கிழமை பொறுப்பேற்றாா்.
தமிழகத்தில் கடந்த ஜன. 1 ஆம் தேதி வெளியான ஐபிஎஸ் அதிகாரிகளின் பணியிட மாறுதல் அறிவிப்பில் திருச்சி ரயில்வே காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய கே. அதிவீரபாண்டியன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, அவருக்குப் பதிலாக சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய டி. செந்தில்குமாா் நியமிக்கப்பட்டாா்.
இந்நிலையில் புதன்கிழமை காலை திருச்சி ரயில்வே காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்ற அவரை சக அதிகாரிகள் வாழ்த்தினா். இவா் ஏற்கெனவே திருச்சி ரயில்வே காவல் கண்காணிப்பாளராகவும், திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகவும் பணியாற்றியவா் ஆவாா்.