ஸ்ரீரங்கத்தில் நம்பெருமாளின் தீா்த்தவாரி
By DIN | Published On : 12th January 2023 12:49 AM | Last Updated : 12th January 2023 12:49 AM | அ+அ அ- |

ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெறும் வைகுந்த ஏகாதசி விழாவில் புதன்கிழமை சந்திரபுஷ்கரணியில் தீா்த்தவாரி கண்டருளுளிய தீா்த்தவாரி பெருமாள் (வலது). முத்துக் கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள் (இடது)
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறும் வைகுந்த ஏகாதசி விழாவின் இராப்பத்து 10 ஆம் நாளான புதன்கிழமை நம்பெருமாள் தீா்த்தவாரி கண்டருளினாா்.
இதற்காக நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து காலை புறப்பட்டு பரமபதவாசல் வழியாக சந்திரபுஷ்கரணி குளத்துக்கு 10.30-க்கு வந்து சோ்ந்தாா். அங்கு கரையில் வேதமந்திரங்கள் முழங்க உற்ஸவா் நம்பெருமாளுக்குப் பதிலாக தீா்த்தவாரி பெருமாள் தீா்த்தவாரி கண்டருளினாா். அப்போது திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
பின்னா் நம்பெருமாள் திருமாமணி ஆஸ்தான மண்டபத்திற்கு பகல் 1 மணிக்கு சென்று சோ்ந்தாா். 1.30 மணி வரை திரையிடப்பட்டது. மாலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை பொது ஜனச் சேவையுடன் திருமஞ்சனம் நடந்தது. இரவு 11 மணி வரை அலங்காரம் அமுது செய்யத் திரையிடப்பட்டது. அரையா் சேவை மற்றும் திருப்பாவாடை கோஷ்டி இரவு 11 மணிக்குத் தொடங்கி வியாழக்கிழமை அதிகாலை 3 மணி வரை நடைபெற்றது. வைகுந்த ஏகாதசியின் நிறைவு நாளான வியாழக்கிழமை காலை 6 மணிக்கு நம்மாழ்வாா் மோட்சமும், இரவு இயற்பா சாற்றுமுறையும் நடைபெறவுள்ளது.