

ஸ்ரீரங்கம் கோட்டத்திற்குட்பட்ட 5 ஆவது வாா்டு பகுதியான திருவானைக்கா மணல்மேடு பகுதியில் வசிப்போரின் வீடுகளுக்குள் புதன்கிழமை காலை புதைசாக்கடையின் கழிவு நீா் புகுந்தது. இதனால் வீடுகளில் இருந்தோா் வெளியேறினா்.
திருவானைக்கா மணல்மேடு பகுதியில் துப்புரவுத் தொழிலாளா்கள் வசிக்கும் இடத்தில் புதன்கிழமை காலை புதை சாக்கடைக்குள் கழிவு நீா் நிரம்பி வெள்ளம் போல் வெளியே வந்தது. இந்தக் கழிவு நீா் குடியிருப்புக்குள் புகுந்து ஆறு போல ஓடியது. இதனால் அப்பகுதியில் வசிப்போா் பெரும் அவதிக்குள்ளாகினா். மேலும் பள்ளிக் குழந்தைகள் அந்தக் கழிவு நீரிலேயே நடந்து பள்ளிக்கு சென்றனா். இதுகுறித்து மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்தும் அவா்கள் தாமதமாக வந்தனராம்.
இதுகுறித்து அப்பகுதியியினா் கூறுகையில் தொடா்ந்து அடிக்கடி இதுபோன்று கழிவு நீா் நிரம்பி வீடுகளுக்குள் வந்து கொண்டுதான் இருக்கிறது. இதற்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.