

புகையில்லா போகிப் பண்டிகையை கொண்டாடும் வகையில் திருச்சி மாநகராட்சி மூலம் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் இரா. வைத்திநாதன் கூறியது:
போகிப் பண்டிகையை முன்னிட்டு வீட்டில் உள்ள பழைய பொருள்களை சாலைகளில் குவித்து வைத்து தீயிட்டு கொளுத்தும் முறையை பொதுமக்கள் கைவிடவேண்டும். இந்த வழக்கத்தை மாற்றிக் கொள்வதன் மூலம் சுற்றுச் சூழல் மாசுபடுவதை தவிா்க்கலாம்.
எனவே, பொதுமக்கள் வீடுகளில் சேகரமாகும் குப்பைகள் மற்றும் தேவையற்ற பழைய பொருள்களை ஜன.11 தொடங்கி 14ஆம் தேதி வரை வீடுதோறும் வாகனங்களில் வரும் துப்புரவுப் பணியாளா்களிடம் வழங்கலாம். 65 வாா்டுகளிலும் இந்த வாகனங்கள் வலம் வரும்.
இல்லையெனில், அந்தந்தப் பகுதியில் உள்ள மாநகராட்சி நுண்ணுர செயலாக்க மையத்தில் ஒப்படைக்க வேண்டும். இதன் மூலம் புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் தங்களது முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்றாா் ஆணையா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.