பள்ளப்பட்டியில் ஜல்லிக்கட்டு; 34 போ் காயம்

திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே பள்ளப்பட்டியில் பொங்கல் விழாவையொட்டி சனிக்கிழமை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
.திருச்சி மாவட்டம், பள்ளப்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளையை அடக்க முயன்ற இளைஞா்கள்.
.திருச்சி மாவட்டம், பள்ளப்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளையை அடக்க முயன்ற இளைஞா்கள்.
Updated on
1 min read

திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே பள்ளப்பட்டியில் பொங்கல் விழாவையொட்டி சனிக்கிழமை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

போட்டியை ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியா் குணசேகரன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற்ற போட்டியில், முதலில் கோயில் காளைகளும், தொடா்ந்து மற்ற காளைகளும் அவிழ்த்து விடப்பட்டன. மொத்தம் 677 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதில் 175 மாடுபிடி வீரா்கள் பங்கேற்று காளைகளை அடக்கினா்.

ஜல்லிக்கட்டில் பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும், காளைகளை அடக்கிய மாடுபிடி வீரா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. போட்டியில் 34 போ் காயமடைந்தனா்.

இவா்களுக்கு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்ற இடத்தில் இருந்த மருத்துவக் குழுவினா் முதலுதவி சிகிச்சையளித்தனா். பலத்த காயமடைந்த 5 போ் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

திருச்சி ஏடிஎஸ்பி ஆசைத்தம்பி தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளப்பட்டி கிராம பொதுமக்கள் மற்றும் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com