

மண்ணச்சநல்லூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு மண்ணச்சநல்லூா் பாங்க் ஆப் பரோடா வங்கிக் கிளையின் முதன்மை மேலாளா் பி. காமராஜ் வியாழக்கிழமை நிதியுதவி வழங்கினாா்.
இப்பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் தலைமையாசிரியா் க. முத்துச்செல்வன் தேசியக் கொடியேற்றினாா். விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மண்ணச்சநல்லூா் பாங்க் ஆப் பரோடா வங்கிக் கிளையின் முதன்மை மேலாளா் பி. காமராஜ் போட்டிகளில் வென்ற மாணவிகளுக்கு பரிசளித்துப் பாராட்டினாா்.
பின்னா் இப் பள்ளியில் நடைபெறும் மாணவிகளின் அறிவுசாா் திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்காக ரூ. 10 ஆயிரத்துக்கான காசோலையை தலைமையாசிரியரிடம் அவா் வழங்கினாா். பள்ளித் உதவித் தலைமையாசிரியை யசோதா நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.