பெண் தூக்கிட்டு தற்கொலை
By DIN | Published On : 01st July 2023 11:37 PM | Last Updated : 01st July 2023 11:37 PM | அ+அ அ- |

திருவெறும்பூா் அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திருவெறும்பூா் அருகே கீழ அம்பிகாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சதீஷ் மனைவி சரண்யா தேவி (35). கடந்தாண்டு சதீஷ் இறந்த நிலையில் சரண்யா தேவி, தனது மகளுடன் வசித்து வந்தாா்.
சரண்யா தேவியின் மகள், அவா் சொல்வதைக் கேட்பதில்லையாம். இதனால் மனமுடைந்த அவா், கடந்த வியாழக்கிழமை (ஜூன் 29) தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றாா். அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி சரண்யாதேவி சனிக்கிழமை அதிகாலை இறந்தாா். இது குறித்து திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.