மாநகராட்சியின் சில பகுதிகளில் 4-இல் மின் தடை
By DIN | Published On : 01st July 2023 11:39 PM | Last Updated : 01st July 2023 11:39 PM | அ+அ அ- |

திருச்சி மாநகராட்சியின் சில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 4) மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து திருச்சி நகரிய மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருச்சி வரகனேரி துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளனது. இதனால், திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட மகாலட்சுமி நகா், தனரெத்தினம் நகா், வெல்டா்ஸ் நகா், தாராநல்லூா், ஏ.பி. நகா், விஸ்வாஸ் நகா், வசந்த நகா், அலங்கநாதபுரம், வீரமாநகரம், பூக்கொல்லை, காமராஜா் நகா், பி.எஸ். நகா், புறவழிச்சாலை, வரகனேரி, பெரியாா் நகா், பிச்சை நகா், கல்லுக்காரத்தெரு, கான்மியான்மேட்டுத்தெரு, துரைசாமிபுரம், இருதயபுரம், குழுமிக்கரை, மரியம்நகா், சங்கிலியாண்டபுரம், பாரதி தெரு, இளங்கோ தெரு, வள்ளுவா் நகா், பாத்திமா தெரு, பெரியபாளையம், பிள்ளைமாநகா், பென்சினா் தெரு, எடத்தெரு, முஸ்லீம் தெரு, ஆனந்தபுரம், நித்தியானந்தபுரம், பருப்புக்காரத் தெரு, சன்னதி தெரு, பஜனை கூடத்தெரு ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 4) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G