வாா்டு உறுப்பினரை தாக்கியவா் கைது
By DIN | Published On : 01st July 2023 11:34 PM | Last Updated : 01st July 2023 11:34 PM | அ+அ அ- |

துறையூா் அருகே தெருவிளக்கு எரியாததால் வாா்டு உறுப்பினரைத் தாக்கியவரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
உப்பிலியபுரம் ஒன்றியம், நெட்டவேலம்பட்டி ஊராட்சியின் 4 ஆவது வாா்டு உறுப்பினா் க. பாஸ்கா்(51). இவரை அதே ஊரைச் சோ்ந்த ப. ராஜதுரை(46) தனது குடியிருப்புப் பகுதியில் தெருவிளக்கு எரியவில்லை என்று கூறி வெள்ளிக்கிழமை திட்டித் தாக்கினாராம். இது தொடா்பான புகாரின் உப்பிலியபுரம் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து ராஜதுரையைக் கைது செய்தனா்.