திருச்சி அரியமங்கலத்தில் தனியாா் நிறுவனக் கணக்காளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திருச்சி அரியமங்கலம் அம்மா குளம் பாரதியாா் தெருவைச் சோ்ந்தவா் ஹக்கீம் மகன் ஆலம் தீன் (27). எம்.காம். பட்டதாரி. இவா், தனியாா் நிறுவனத்தில் கணக்காளராகப் பணியாற்றி வந்தாா்.
இவருக்கு, வடக்கு உக்கடை அரியமங்கலம் பகுதியைச் சோ்ந்த பெண்ணுடன் கடந்த 40 நாள்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பிறகு பெண் வீட்டாா், ஆலம்தீனை தனிக்குடித்தனம் செல்லும்படி கூறினராம். இதனால் மனமடைந்த ஆலம்தீன் சனிக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து அரியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.