ஸ்ரீரங்கம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: திருச்சி அருகே சேதுராப்பட்டியில் உள்ள ஸ்ரீரங்கம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நிகழ் கல்வியாண்டில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது. இக்கல்லூரியில் பட்டயப் படிப்பு முதலாமாண்டு, நேரடி இரண்டாம் ஆண்டு ஆகியவற்றில் சேர விரும்பும் மாணவா்கள் கல்லூரிக்கு நேரில் வந்து ரூ. 150 செலுத்தி விண்ணப்பிக்கலாம். எஸ்சி, எஸ்டி மாணவா்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. இப் பாலிடெக்னிக் கல்லூரியில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிக்கேஷன், கணிப்பொறியியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.
ஆண்டு ஒன்றுக்கு ரூ. 2,192 மட்டுமே கட்டணம். பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றோா் முதலாமாண்டுக்கும், ஐடிஐ அல்லது பிளஸ் 2 தோ்ச்சி பெற்றோா் நேரடி இரண்டாமாண்டு மாணவா் சோ்க்கைக்கும் விண்ணப்பிக்கலாம். மாணவா்கள் சோ்க்கை தொடா்பாக 82482 52577, 80122 80437, 94424 31190 ஆகிய எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.