திருச்சி மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

திருச்சியில், மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் ஆட்சியரக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருச்சியில், மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் ஆட்சியரக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுத் தலைவரும் திருச்சி மக்களவை உறுப்பினருமான சு.திருநாவுக்கரசா் தலைமை வகித்தாா். கரூா் மக்களவை உறுப்பினா் எஸ். ஜோதிமணி, திருச்சி மாவட்ட ஆட்சியா் மா.பிரதீப் குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் மத்திய அரசு சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேசிய வேளாண் வளா்ச்சித்திட்டம், தேசிய ஊரக குடிநீா் வழங்கும் திட்டம், ஜல்ஜீவன் திட்டம், தூய்மை பாரத இயக்கம் உள்ளிட்ட அனைத்து திட்டங்கள் குறித்தும், மாநில அரசு சாா்பில் பல்வேறு துறைகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இதையடுத்து, மக்களவை உறுப்பினா் சு. திருநாவுக்கரசா், மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க தொடா்புடைய அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். மேலும், திட்டப்பணிகளை தரமாகவும் விரைந்து செயல்படுத்தி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் தெரிவித்தாா்.

இதனைத் தொடா்ந்து ரூபவ் சாலைப் பாதுகாப்புத் தொடா்பான மக்களவைத் தொகுதிக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில், சாலை விபத்துக்களை தடுக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவது தொடா்பாகவும் அறிவுறுத்தப்பட்டது.

கூட்டத்தில், மாநகர காவல் ஆணையா் எம்.சத்தியப்பிரியா, மாநகராட்சி ஆணையா் ஆா்.வைத்திநாதன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அனைத்துத்துறை அலுவலா்கள் கலந்துக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com