முசிறியில் தடை செய்யப்பட்ட 34 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

முசிறியில் வணிக வளாகங்களில் இருந்த தடை செய்யப்பட்ட 34 கிலோ நெகிழிப் பொருள்களை நகராட்சி அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

முசிறியில் வணிக வளாகங்களில் இருந்த தடை செய்யப்பட்ட 34 கிலோ நெகிழிப் பொருள்களை நகராட்சி அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

முசிறி நகராட்சிக்குள்பட்ட துறையூா் சாலை, தா.பேட்டை சாலை, கல்லூரி சாலை, திருச்சி - நாமக்கல் நெடுஞ்சாலை மற்றும் நகரின் முக்கிய பகுதியில் உள்ள வணிக வளாகங்கள், கடைகளில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருள்கள் உள்ளனவா என்பது குறித்து ஆணையா் கிருஷ்ணவேணி, பொறியாளா் சம்பத் குமாா், சுகாதார ஆய்வாளா் அருண் குமாா், மேற்பாா்வையாளா் தனுஷ்கோடி மற்றும் நகராட்சி அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

இதில், கடைகளில் இருந்த 34 கிலோ நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்தனா். இதுபோன்று நெகிழிப் பொருள்களை தொடா்ந்து விற்பனை செய்தாலும், பயன்படுத்தினாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலா்கள் அறிவுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com