திருச்சியில் 3 நாள்கள் வானியல் கருத்தரங்கம்!

வானியல் தொடர்பான மூன்று நாள் கருத்தரங்கம். திருச்சி பிஷப் ஹூபர் கல்லூரியில் துவங்கியது.
திருச்சியில் 3 நாள்கள் வானியல் கருத்தரங்கம்!

தமிழ்நாடு அஸ்ட்ரோ  சயின்ஸ் சிம்போசியம் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் ஜூன் 29, 30 ஜூலை 1 ஆகிய மூன்று தினங்கள் நடைபெறுகிறது. 

இந்த நிகழ்ச்சியை 30ஆம் தேதி காலை நிலா மனிதர் இஸ்ரோ முன்னாள் இயக்குனர் முனைவர் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் துவக்கி வைத்து உரையாற்றுகிறார்.

சிறப்புரைகளை ஆற்ற பேராசிரியர் முனைவர் பிரியா (ஹசன் மெளலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழகம்), இஸ்ரோ முதுபெரும் விஞ்ஞானி பேராசிரியர் இளங்கோவன் இந்த மூன்று நாள் வானியல் கருத்தரங்க நிகழ்வில் கலந்து கொண்டு மிக முக்கியமான உரைகளை நிகழ்த்த இருக்கின்றனர்.

பிரேசில் நாட்டில் கருந்துளைகள் பற்றிய ஆய்வினை மேற்கொண்டு வரும் விஞ்ஞானி முனைவர் சதீஷ் குமார் சரவணன் (சர்வதேச இயற்பியல் மையம் பிரேசில்),  இந்திய வானியற்பியல் மையத்தின் கீழ் இயங்கும் கொடைக்கானல் சூரியக் கண்காணிப்பக இருப்பிட விஞ்ஞானி முனைவர் எபனேசர் செல்லசாமி அவர்களும் இந்த மூன்று நாள் நிகழ்வில் உரையாற்ற இருக்கின்றனர்.

இதனை மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப பிரிவின் கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரசார் அதன் தமிழ் பிரிவான அறிவியல் பலகை, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம், தமிழ்நாடு அஸ்ட்ரானமி & சயின்ஸ் சொசைட்டி, இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் அஸ்ட்ரோ பிசிக்ஸ், கொடைக்கானல் சூரிய கண்காணிப்பகம் பிஷப் ஹீபர் கல்லூரி ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்துகின்றன. 

விஞ்ஞான் பிரசாரின் முதுநிலை விஞ்ஞானி முனைவர் த.வி வெங்கடேஸ்வரன், புது தில்லி இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். இந்த மூன்று நாள் நிகழ்வில்  200க்கும் மேற்பட்ட வானியல் ஆர்வலர்கள் தமிழ்நாடு முழுவதும் இருந்து கலந்து கொள்கின்றனர். மேலும் பிஷப் ஹீபர் கல்லூரி மாணவர்களும் இதில் பங்கேற்கின்றனர். 

வானியல் தொடர்பான சிறப்புரைகள், குழு விவாதங்கள்,சுவரொட்டி விளக்கக்காட்சி, கண்காட்சிகள், புத்தகக் கண்காட்சிகள், வானியற்பியல் கண்காட்சிகள், இரவு வான் நோக்கல் நிகழ்வுகள், புத்தக வெளியீடுகள், கோளரங்க காட்சி ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இவற்றில் பொதுமக்களும் கலந்து கொண்டு பார்வையிடலாம், மேலும் தொலைநோக்கிகளின் அணிவகுப்பும் இந்த நிகழ்ச்சியில் நடைபெற இருக்கிறது.  இதற்கான ஏற்பாடுகளைத் தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டியின் நிறுவனர் ஜெ.மனோகர், பிஷப் ஹீபர் கல்லூரி முதல்வர் முனைவர் பால் தயாபரன், அறிவியல் புல முதன்மையர் முனைவர் வயலெட் தயாபரன்,இணை  முதன்மையர் முனைவர் ஜோஸ்பின் பிரபா, அறிவியல் பலகை மாநில ஒருங்கிணைப்பாளர் பா. சிறீகுமார் தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com