ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு ஜூலை 2 ஜேஷ்டாபிஷேகம்
By DIN | Published On : 30th June 2023 12:38 AM | Last Updated : 30th June 2023 12:38 AM | அ+அ அ- |

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் பெரிய திருமஞ்சனம் எனும் ஜேஷ்டாபிஷேகம் ஜூலை 2-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இக்கோயிலில் ஆண்டு தோறும் ஆனி மாதத்தில் நடைபெறும் பெரிய திருமஞ்சனம் எனும் ஜேஷ்டாபிஷேகம் ஜூலை 2-ஆம் தேதி நடைபெறவுள்ளது.இதனையொட்டி அன்றைய தினம் ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் காவிரி ஆற்றிலிருந்து தங்கக் குடத்தில் திருமஞ்சனம் எடுத்து ஆண்டாள் யானை மீது வைத்து மங்கள வாத்தியங்கள் ஊா்வலமாக கோயிலுக்கு எடுத்து வரப்படும்.
அதனை தொடா்ந்து பெருமாளின் அங்கிகள் (நகைகள்) கலையப்பட்டு தொண்டைமான் மேட்டில் வைத்து சுத்தம் செய்து திரும்ப ஒப்படைத்து மங்கள ஹாரத்தி நடைபெறும். இதனால் மூலவா் சேவை ஞாயிற்றுக்கிழமை முழுவதும் கிடையாது. ஜூலை 3-ஆம் தேதி திருப்பாவாடை எனும் தளிகை அமுது செய்தல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அதனை தொடா்ந்து மங்களஹாரத்திக்கு பிறகு மாலை 4.30 மணிக்கு பக்தா்கள் சேவை நடைபெறும்.மேலும் மூலவருக்கு தைலகாப்பு சாற்றப்படவுள்ளதால் அது உலரும் வரை மூலவா் பெருமாளின் திருமுகத்தை மட்டும் பக்தா்கள் தரிசனம் செய்ய முடியும் என்று கோயில் இணை ஆணையா் செ.சிவராம்குமாா் தெரிவித்துள்ளாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...