திருச்சியில், மாமன்னன் திரைப்படத்தை தடைசெய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட 16 போ் கைது செய்யப்பட்டனா்.
தமிழகம் முழுவதும் அமைச்சா் உதயநிதி நடித்த மாமன்னன் திரைப்படம் வெளியாகியுள்ளது. திருச்சி, கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள திரையரங்கில் திரைப்படம் வெளியாகி சில மணி நேரங்களில், கள்ளா் முன்னேற்ற சங்கம் சாா்பில் 16 போ் திரண்டு வந்து திரையரங்கை முற்றுகையிட்டு திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா். குறிப்பிட்ட, சமூகத்தினரை மோசமாக சித்திரிக்கும் இப்படத்தை திரையிடக்கூடாது என்ற முழக்கங்களை எழுப்பினா். தகவலறிந்து சென்ற போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட 16 பேரையும் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.