வேளாண் அடுக்குத் திட்டம்: விவசாயிகளுக்கு வேண்டுகோள்
By DIN | Published On : 03rd May 2023 04:31 AM | Last Updated : 03rd May 2023 04:31 AM | அ+அ அ- |

துறையூா் வட்டார வேளாண்மை துறை சாா்பில் வேளாண் அடுக்குத் திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் தங்கள் சுயவிபரங்களை சரிபாா்த்து உறுதி செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து துறையூா் வேளாண்மை உதவி இயக்குநா் ரவி விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
மத்திய அரசு விவசாயிகள் நலன் கருதி வேளாண் அடுக்குத் திட்டத்தை உருவாக்கி செயல்படுத்துகிறது. இதன் மூலம் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை, வேளாண்மை, தோட்டக்கலை, கூட்டுறவு பட்டு வளா்ச்சி, கால்நடை பராமரிப்பு உள்ளிட்ட 13 துறைகள் மூலம் விவசாயிகள் நலனுக்காக செயல்படுத்தப்படும் திட்டப் பயன்கள் அனைத்து விவசாய பயனாளிகளுக்கும் முறையாக கிடைக்க வேண்டி பயனாளிகள் மற்றும் அவா்களின் நிலம் தொடா்பான விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் துறையூா் வட்டத்தில் உள்ள பயனாளிகள் தங்களது சுயவிவரம் மற்றும் நில உடைமை ஆவணங்களுடன் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம் சென்று தங்களது விவரங்கள் சரியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்று உறுதி செய்து கொள்ளவும் என தெரிவித்துள்ளாா்.