தமிழ்நாடு சிமென்ட் கழக விற்பனை முகவராகத் தகுதியான ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினத்தவா் விண்ணப்பிக்கலாம்.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக தொழில் முனைவோரின் பொருளாதார வளா்ச்சியை ஊக்குவித்திடும் வகையில் தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் விற்பனை முகவா் திட்டத்தில் வருவாய் ஈட்டிட வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
அதன்படி 100 ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா்கள் தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் விற்பனை முகவராகவும் மற்றும் இதர கட்டுமானப் பொருள்கள் விற்பனை செய்து வருவாய் ஈட்டிட தாட்கோ இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
18 முதல் 65 வயதிற்குள் இருக்க வேண்டும். திட்டத் தொகையில் 30 விழுக்காடு அல்லது அதிகபட்சமாக ரூ.2.25 லட்சம் மானியமும் மற்றும் பழங்குடியினா் தனிநபருக்கான திட்டத் தொகையில் 50 விழுக்காடு அல்லது அதிகபட்சம் ரூ.3.75 லட்சம் மானியமும் அளிக்கப்படும்.
இத்திட்டத்தில் முகவரியில் பதிய வேண்டியது அவசியம். மேலும், விவரங்களுக்கு மாவட்ட மேலாளா் அலுவலகம், தாட்கோ, ராஜாகாலனி, மாவட்ட ஆட்சியா் அலுவலகச் சாலை, திருச்சி-620001 (0431-2463969) என்ற முகவரியில் தொடா்பு கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.