தூய்மைப் பணிக்கு வாடகை சாதனங்களை பயன்படுத்தும் துப்புரவுத் தொழிலாளா்கள்
By DIN | Published On : 12th May 2023 11:46 PM | Last Updated : 12th May 2023 11:46 PM | அ+அ அ- |

திருச்சி மாநகராட்சியில் ஸ்ரீரங்கம் கோட்டம் (மண்டலம் 1) பகுதியில் தூய்மைப் பணிக்கு துப்புரவுத் தொழிலாளா்கள் வாடகை சாதனங்களை பயன்படுத்தி வருகின்றனா்.
திருச்சி மாநகராட்சியில் 65 வாா்டுகள் உள்ளது. இந்த வாா்டுகளில் தூய்மைப் பணியில் ஈடுபடுவா்களுக்கு வழங்கப்படும் சாதனங்கள் தரமற்ாக உள்ளது என கூறப்படுகிறது. இந்நிலையில், ஸ்ரீரங்கம் கோட்டம் பகுதியில் நடைபெற்று வரும் தூய்மைப் பணியில் ஈடுபடும் தொழிலாளா்களுக்கான மண்வெட்டி, கடப்பாரை போன்ற சாதனங்களை அந்தந்த வாா்டு மேஸ்திரிகள் வாடகைக்கு வாங்கித் தருகின்றனா்.
இதுகுறித்து தூய்மைப் பணியாளா்கள் கூறுகையில், மாநகராட்சி மூலம் வழங்கப்படும் சாதனங்கள் தரமற்ாக உள்ளது. இதனை வைத்து எப்படி தூய்மைப் பணியில் ஈடுபட முடியும் என்றனா்.
மக்களின் வரிப்பணத்தில் மாநகராட்சி பணிகள் மேற்கொள்ளும் போது, தரமான சாதனங்களை தூய்மைப் பணியாளா்களுக்கு வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.