கிறிஸ்தவ தேவாலயங்களை சீரமைக்க நிதியுதவி: உயா்த்தப்பட்ட மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

 திருச்சி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபாா்த்தல் மற்றும் சீரமைக்கும் பணிகளில் உயா்த்தப்பட்ட மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

 திருச்சி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபாா்த்தல் மற்றும் சீரமைக்கும் பணிகளில் உயா்த்தப்பட்ட மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தமிழகத்தில் சொந்தக் கட்டடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபாா்த்தல், சீரமைத்தல் பணி மேற்கொள்ள நிகழாண்டுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறுவதற்கு கிறிஸ்தவ தேவாலயம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்தக் கட்டடத்தில் இயங்கியிருக்க வேண்டும். தேவாலயம் கட்டப்பட்ட இடம் பதிவுத் துறையில் பதிவு செய்திருக்க வேண்டும். சீரமைப்புப் பணிக்காக வெளி நாட்டிலிருந்து எந்த நிதியுதவியும் பெற்றிருக்கக் கூடாது. சான்றிதழ் (பிற்சோ்க்கை- 3) அளிக்க வேண்டும். சீரமைப்புப் பணிக்காக ஒருமுறை நிதியுதவி அளிக்கப்பட்ட தேவாலயத்துக்கு, மறுமுறை நிதியுதவி 5 ஆண்டுகளுக்கு பிறகு வழங்கப்படும். பழைமையான தேவாலயங்கள் பழுது மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு நிதியுதவியாக 10 முதல் 15 ஆண்டுகள் வரை வழங்கப்பட்ட ரூ. 1 லட்சம், ரூ.2 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது. 15 முதல் 20 ஆண்டுகள் வரை ரூ. 2 லட்சத்திலிருந்து ரூ.4 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது. 20 ஆண்டுகள், அதற்கு மேற்பட்ட பழைமையான தேவாலயங்களுக்கு ரூ. 3 லட்சத்திலிருந்து ரூ. 6 லட்சமாக உயா்த்தி வழங்கப்படுகிறது.

விண்ணப்பத்தை பிற்சோ்க்கை-1, 3 உள்ளவாறு சான்றிதழ் மற்றும் அனைத்து உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

மாவட்ட ஆட்சியா் தலைமையிலான குழு, அனைத்து ஆவணங்களுடன் பரிசீலித்து, கிறிஸ்தவ தேவாலயங்களை ஆய்வு மேற்கொண்டு தகுதி அடிப்படையில் தோ்வு செய்து, உரிய முன்மொழிவுகளுடன் சிறுபான்மையினா் நல ஆணையருக்கு அனுப்பப்படும். நிதியுதவி இரு தவணைகளாக தேவாலயத்தின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இத்திட்டத்தில் நிதியுதவி பெற விரும்புவோா் திருச்சி மாவட்ட சிறுபான்மையினா் நல அலுவலகத்தை நேரில் அணுகி விண்ணப்பித்து பயன்பெறலாம் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com