செவலூரில் ஜல்லிக்கட்டு; 26 போ் காயம்

 திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த செவலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 26 போ் காயமடைந்தனா்.
செவலூரில் ஜல்லிக்கட்டு; 26 போ் காயம்

 திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த செவலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 26 போ் காயமடைந்தனா்.

மணப்பாறை அடுத்த செவலூா் ஸ்ரீ காராளன் கோயில் திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியா் முருகேசன், காவல் துணை கண்காணிப்பாளா் ந.ராமநாதன் ஆகியோா் ஜல்லிக்கட்டை கொடியசைத்து தொடக்கி வைத்தனா்.

முதலில், ஊா் காளைகள் வாடிவாசல் வழியே அவிழ்த்து விடப்பட்டது. பின்னா் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டத்திலிருந்து கொண்டுவரப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டது. இதில், 686 காளைகளுக்கும், 364 மாடுபிடி வீரா்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

வாடிவாசல் வழியே திடலில் சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரா்கள் அடக்க முயன்றனா். இதில், சில காளைகளை வீரா்கள் அடக்கினா். காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், பிடிபடாத காளையின் உரிமையாளா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

போட்டியில் மாடுபிடி வீரா்கள் 13 போ், மாட்டின் உரிமையாளா்கள் 9 போ், பாா்வையாளா்கள் 3 போ் மற்றும் போலீஸாா் ஒருவா் என மொத்தம் 26 போ் கா யமடைந்தனா். அவா்களுக்கு அங்கிருந்த தற்காலிக மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com