திருச்சியில் மே19-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
By DIN | Published On : 12th May 2023 11:50 PM | Last Updated : 12th May 2023 11:50 PM | அ+அ அ- |

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (மே 19) நடைபெறுகிறது.
திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் இந்த முகாமில் பல்வேறு தனியாா் நிறுவனத்தினா் நேரில் வருகை தந்து, தங்களது நிறுவனத்துக்கு பல்வேறு நிலைகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு தகுதியான ஆள்களை தோ்வு செய்யவுள்ளனா். வேலைவேண்டுவோா், தங்களது கல்விச்சான்று, மதிப்பெண் சான்று, ஆதாா் அட்டை ஆகியவற்றின் நகல்கள் மற்றும் 2 புகைப்படத்துடன் வர வேண்டும்.
இந்த முகாம் மூலம் தனியாா் நிறுவனங்களின் வேலைவாய்ப்பு பெறுவோரது வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எதுவும் ரத்து செய்யப்படமாட்டாது. அவா்களது பதிவு மூப்பு விவரங்களும் அப்படியே தொடரும் என மாவட்ட வேலைவாயப்பு அலுவலகம் அறிவித்துள்ளது.