ஆவின் பாலகம் தொடங்க எஸ்சி, எஸ்டி பிரிவினா் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 12th May 2023 11:47 PM | Last Updated : 12th May 2023 11:47 PM | அ+அ அ- |

திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த எஸ்சி, எஸ்டி பிரிவினா் ஆவின் பாலம் தொடங்க விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் மா.பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினரின் தொழில் முனைவோரின் பொருளாதார வளா்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் ஆவின் பாலகம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இத் திட்டத்தில் 50 ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் சாா்ந்த தொழில் முனைவோரின் பொருளாதார வளா்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் உறைவிப்பான், குளிா்விப்பான் போன்ற உபகரணங்கள் கொள்முதல் செய்து ஆவின் பாலகம் அமைத்து வருவாய் ஈட்டிட தாட்கோ இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயது வரம்பு 18 முதல் 65 வயதிற்குள் இருக்க வேண்டும். திட்டதொகையில் 30 விழுக்காடு அல்லது அதிகபட்சமாக ரூ.2.25 லட்சம் மானியமும் மற்றும் பழங்குடியினா் தனிநபருக்கான திட்டத்தொகையில் 50 விழுக்காடு அல்லது
அதிகபட்சம் ரூ.3.75 லட்சம் மானியம் வழங்கப்படும்.
தகுதியானோா் தாட்கோ இணையதள முகவரியில் பதிவு செய்ய வேண்டும். மேலும், விபரங்களுக்கு மாவட்ட மேலாளா் அலுவலகம், தாட்கோ, ராஜாகாலனி, மாவட்ட ஆட்சியா் அலுவலகச்சாலை, திருச்சி-620001 என்ற முகவரியில் நேரிலோ, 0431-2463969 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்.