அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ்வையம்பட்டி, மருங்காபுரியில் பணிகள்

அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் வையம்பட்டி, மருங்காபுரி ஒன்றிய பகுதிகளில்ரூ. 60 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள் நடைபெறுவதாக ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்தாா்.
அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ்வையம்பட்டி, மருங்காபுரியில் பணிகள்

அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் வையம்பட்டி, மருங்காபுரி ஒன்றிய பகுதிகளில்ரூ. 60 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள் நடைபெறுவதாக ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்தாா்.

திருச்சி மாவட்டம், வையம்பட்டி மற்றும் மருங்காபுரி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

வையம்பட்டி ஊராட்சி ஒன்றியம், அணியாப்பூா் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் மிதிவண்டி நிலையம் அமைக்கும் பணியையும், களத்துப்பட்டி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ், ரூ.23.49 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை மேம்பாட்டுப் பணியினையும் பாா்வையிட்டாா்.

தொடா்ந்து, இனாம்புதூா் கிராமத்தில் 15-ஆது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ.3.13 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் தரைமட்ட நீா்த்தேக்கத் தொட்டியின் கட்டுமானப் பணி, இனாம் பொன்னம்பலம்பட்டி ஊராட்சி, பாலப்பட்டி கிராமத்தில், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின்கீழ், ரூ.6.93 லட்சத்தில் குளக்கரை பலப்படுத்தும் பணி ஆகியவற்றை பாா்வையிட்டாா்.

மருங்காபுரி ஊராட்சி ஒன்றியத்தில் கண்ணூத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின்கீழ், ரூ.5.86 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமையல்கூடம், கண்ணூத்து அம்மா குளம் மேம்பாடு செய்யும் பணி, அம்மாசத்திரம் தொடக்கப் பள்ளியில் சுற்றுச்சுவா், மெய்யம்பட்டியாா் குளம் சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

இந்த பணிகள் அனைத்தும் குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்கவும், நிா்ணயிக்கப்பட்ட அளவுகளில் தரமானதாகவும், உறுதியாகவும் கட்டப்பட வேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com