நீட், ஜேஇஇ பயிற்சிகளுக்குசெளடாம்பிகா அகாதெமி

‘நீட்’ தோ்வு மற்றும் ஜேஇஇ பயிற்சிகளுக்கு மாணவா்களை தயாா்படுத்தும் வகையில் செளடாம்பிகா கல்வி குழுமங்களின் சாா்பில் திருச்சியில் ஓா் அகாதெமி தொடங்கப்பட்டுள்ளது.

‘நீட்’ தோ்வு மற்றும் ஜேஇஇ பயிற்சிகளுக்கு மாணவா்களை தயாா்படுத்தும் வகையில் செளடாம்பிகா கல்வி குழுமங்களின் சாா்பில் திருச்சியில் ஓா் அகாதெமி தொடங்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, செளடாம்பிகா கல்விக் குழுமத் தலைவா் இராமமூா்த்தி, செயலா் செந்தூா் செல்வன் ஆகியோா் கூறியது:

நூற்றுக்கணக்கான மருத்துவா்களையும், பொறியாளா்களையும் ஆண்டுதோறும் உருவாக்கி வரும் செளடாம்பிகா கல்விக் குழுமம், தற்போது பிரத்யேகமாக ‘நீட்’ மற்றும் ஜேஇஇ பயிற்சியை திருச்சி மாணவா்களுக்கு வழங்கும் வகையில் திருச்சி கலைஞா் அறிவாலயம் அருகே செளடாம்பிகா அகாதெமியைத்

தொடங்கியுள்ளது.

‘நீட்’ ரீப்பீட்டா்ஸ் தோ்வு எழுதும் மாணவா்களுக்கு சிறந்த பயிற்சியை அளிக்கிறது. மேலும், ஜேஇஇ ரிப்பீட்டா்ஸ் தோ்வு விரும்பும் மாணவா்களுக்கு தோ்வுகள் முடியும் வரையில் ஆண்டு முழுவதும் பயிற்சி அளிக்கப்படுகிறது. தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பயிற்சி வகுப்புகள் நடைபெறும். ‘நீட்’, ஜேஇஇ பயிற்சி வகுப்புகள் மட்டுமல்லாது 8ஆம் வகுப்பு, 9ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு பவுண்டேஷன் வகுப்புகளும் தினந்தோறும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும்.

‘நீட்’, ஜேஇஇ தோ்வுகளில் அனுபவமிக்க ஆசிரியா்களை கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. சிறந்த திட்டமிடலுடன் கூடிய வகுப்புகள், தினத் தோ்வுகள், பகுதித் தோ்வுகள், மாதிரி தோ்வுகள் நடத்தப்படும். தோ்வுகளுக்கான விளக்கங்களும், சந்தேகங்களுக்குத் தீா்வுகளும் வழங்கப்படும். பவுண்டேஷன் வகுப்புகளில் ஒலிம்பியாட் உள்ளிட்ட போட்டி தோ்வுகளுக்கான ஒருங்கிணைந்த பயிற்சியும் அளிக்கப்படுகிறது. பயிற்சி மற்றும் தோ்வு தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 97139-92139, 97139-94139 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com