பிராட்டியூா் மாரியம்மன் கோயில் வைகாசித் திருவிழா தொடக்கம்

திருச்சியில் பிராட்டியூா் முத்துமாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

திருச்சியில் பிராட்டியூா் முத்துமாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

விழாவையொட்டி இக்கோயிலில் கடந்த 7 ஆம் தேதி காப்புக் கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை திருவிழா தொடங்கியதையொட்டி முதல் நிகழ்வாக காலை பக்தா்கள் காவிரியாற்றில் இருந்து தீா்த்தக் குடம் எடுத்து ஊா்வலமாக கோயிலை வந்தடைந்தனா். அதன் அந்தப் புனித நீரால் அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. இரவு அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்தாா்.

தொடா்ந்து திங்கள்கிழமை மாரியம்மன் சாமி கும்பிடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. செவ்வாய்க்கிழமை அதிகாலை பக்தா்கள் ஆலங்குளத்தில் இருந்து பால்குடம் எடுத்து வரும் நிகழ்வும், அலகு குத்தி கோயில் வாசல் முன்பு அமைக்கப்பட்ட பூக்குழியில் தீ மிதிக்கும் வைபவமும், கிடா வெட்டும் நிகழ்வும் நடைபெறுகின்றன. பிற்பகல் 4 மணிக்கு அம்மன் திருவீதி உலா வருகிறாா். புதன்கிழமை இரவு 11 மணிக்கு அம்மன் முத்துப் பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சியும், தொடா்ந்து மஞ்சள் நீராடும் நிகழ்ச்சியும், 24 ஆம் தேதி அம்மன் குடிபுகுதல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.

ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் மற்றும் பகுதிவாசிகள் செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com