துறையூா் அருகே கோயில்களில் புகுந்து நகை, உண்டியல் திருட்டு
By DIN | Published On : 22nd May 2023 04:17 AM | Last Updated : 22nd May 2023 04:17 AM | அ+அ அ- |

துறையூா் அருகே கோயில்களில் மா்ம நபா்கள் புகுந்து சுவாமி நகை, உண்டியல் ஆகியவற்றைத் திருடிச் சென்றனா்.
துறையூா் அருகே சனிக்கிழமை இரவு அம்மாபட்டியில் உள்ள செல்வ மகா மாரியம்மன் கோயிலுக்குள் புகுந்த மா்ம நபா்கள் சுவாமி கழுத்திலிருந்த 1 பவுன் தாலியையும், அதே ஊரில் மல்லம்மாள் கோயில் உண்டியலையும் திருடிச்சென்றதும், காளிப்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் பூட்டை உடைத்து திருட முயற்சித்ததும் ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது. தகவலின்பேரில் துறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.