ஸ்ரீரங்கம் கோயிலில் இளையராஜா வழிபாடு
By DIN | Published On : 22nd May 2023 04:19 AM | Last Updated : 22nd May 2023 04:19 AM | அ+அ அ- |

ஸ்ரீரங்கம் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை வழிபட வந்த திரைப்பட இசையமைப்பாளா் இளையராஜா.
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் திரைப்பட இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.
ஸ்ரீரங்கம் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை வந்த அவரை கோயில் உதவிக் கண்காணிப்பாளா் பழனிச்சாமி உள்ளிட்டோா் வரவேற்றனா். தொடா்ந்து ஸ்ரீரங்கம் நம்பெருமாள், தாயாா், கருடாழ்வாா் சன்னிதிகளில் இளையராஜா தரிசனம் செய்தாா். அப்போது, கோயிலில் தரிசனம் செய்ய வந்திருந்த பக்தா்கள் பலா் அவருடன் கைப்பேசியில் சுயபடமெடுத்துக் கொண்டனா். பின்னா் இளையராஜா புறப்பட்டுச் சென்றாா்.