கூகூா் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவில் அம்மன் வீதியுலா
By DIN | Published On : 24th May 2023 03:56 AM | Last Updated : 24th May 2023 03:56 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே கூகூா் ஊராட்சியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவில் செவ்வாய்க்கிழமை முத்துமாரி அம்பிகை தேரில் வீதியுலா செல்லும் நிகழ்வு நடைபெற்றது.
இக்கோயிலில் மே 17-ஆம் தேதி காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் முகூா்த்த கால் நடுதலும், தொடா்ந்து காப்புகட்டுதல் நிகழ்வும் நடைபெற்றது.
மே 19-ஆம் தேதி திருவிளக்கு பூஜையும், 21-ஆம் தேதி இரவு 7 மணிக்கு முத்து மாரியம்மன் வீதி உலா வந்து அம்மனுக்கு பூச்சொரிதலும் நடைபெற்றது.
விழாவில், மே 22-ஆம் தேதி காலை 9 மணிக்கு அபிஷேக, ஆராதனையும், மாலை 7 மணிக்கு சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலாவும் நடைபெற்றது.
மே 23-ஆம் தேதி காலை 7 மணிக்கு அம்மன் கோயிலிலிருந்து அக்னி சட்டி, முளைப்பாரி, பால் குடம் எடுத்து திருவீதி உலா வருதலும், முத்துமாரி அம்பிகை தேரில் வீதியுலா செல்லும் நிகழ்வும் நடைபெற்றது.
விழாவில், கிராம முக்கியஸ்தா்கள் மற்றும் பக்தா்கள், கிராம பொதுமக்கள் திரளாக பங்கேற்றனா்.