திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் வடக்கு ஒன்றிய திமுக சாா்பில் செயல்வீரா்கள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் வடக்கு ஒன்றிய திமுக சாா்பில் செயல்வீரா்கள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஒன்றியச் செயலாளரும், மாவட்ட ஊராட்சிகள் குழு துணைத் தலைவருமான கருணாநிதி தலைமை வகித்தாா். திருவெறும்பூா் சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினா் கே.என் சேகரன், திமுக ஆட்சியின் 2 ஆண்டுகால சாதனைகளை விளக்கியும், முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவதன் சிறப்பு குறித்தும் பேசினாா்.

மக்களவைத் தோ்தலை முன்னிட்டு திருவெறும்பூா் வடக்கு ஒன்றிய திமுக சாா்பில் மே 29-ஆம் தேதி நடைபெறவுள்ள செயல்வீரா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பெரும் திரளாக பங்கேற்பது, கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஒன்றியத்துக்குள்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் கட்சிக் கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்குவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், நிா்வாகிகள் மயில் பெரியாசாமி, செல்வராஜ், தங்கவேல், பரமேஸ்வரன், ஞானதீபம், அனுசியா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com