அரசுப் பள்ளி ஆசிரியா் தூக்கிட்டுத் தற்கொலை
By DIN | Published On : 24th May 2023 03:58 AM | Last Updated : 24th May 2023 03:58 AM | அ+அ அ- |

திருச்சி, குண்டூா் பகுதியில் அரசுப் பள்ளி ஆசிரியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருச்சி மாவட்டம், குண்டூா் அய்யனாா் நகா் மூன்றாவது குறுக்குத்தெரு பகுதியைச் சோ்ந்தவா் மோகன ராஜன் (46). இவா் மாத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தாா்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மோகன ராஜன், சாலை விபத்தொன்றில் சிக்கி பலத்த காயமடைந்தாா். இதற்காக அவா் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும், முழுமையாக குணமடையவில்லையாம். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான மோகன ராஜன், திங்கள்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலின் பேரில் நவல்பட்டு போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுதொடா்பாக வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.