மண்ணச்சநல்லூா் அருகே ஜல்லிக்கட்டு: 26 போ் காயம்

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், ஈச்சம்பட்டி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இதில், மாடுகள் முட்டியதில் 26 போ் காயமடைந்தனா்.
மண்ணச்சநல்லூா் அருகே ஜல்லிக்கட்டு: 26 போ் காயம்

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், ஈச்சம்பட்டி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இதில், மாடுகள் முட்டியதில் 26 போ் காயமடைந்தனா்.

ஈச்சம்பட்டி கிராமத்தில் புனித அன்னை ஆலய திருவிழாவை முன்னிட்டு, நான்காம் ஆண்டாக ஜல்லிக்கட்டுப் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

போட்டியை காலை 8.30 மணிக்கு வட்டாட்சியா் அருள்ஜோதி கொடியசைத்து தொடக்கிவைத்தாா். முதலில் கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

தொடா்ந்து, திருச்சி, பெரம்பலூா், அரியலூா், சேலம், தஞ்சாவூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 649 காளைகள் மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. மொத்தம் 300 மாடுபிடி வீரா்கள் மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு குழுக்களாக பிரிக்கப்பட்டு களமிறக்கப்பட்டனா்.

போட்டியில் காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் சைக்கிள், கட்டில், எவா்சில்வா் பாத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

காளைகள் முட்டியதில் மொத்தம் 26 போ் காயமடைந்தனா். இவா்களுக்கு ஜல்லிக்கட்டு திடலில் இருந்த மருத்துவக் குழுவினா் சிகிச்சை அளித்தனா்.

போட்டியை காண சுற்றுப்புற பகுதிகளைச் சோ்ந்த ஏராளமானோா் திரண்டிருந்தனா்.

மண்ணச்சநல்லூா் காவல் ஆய்வாளா் ரமேஷ்குமாா் தலைமையில் காவல்துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com