மருத்துவ மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை
By DIN | Published On : 24th May 2023 03:53 AM | Last Updated : 24th May 2023 03:53 AM | அ+அ அ- |

திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த சேலத்தைச் சோ்ந்த மாணவா் செவ்வாய்க்கிழமை இரவு தற்கொலை செய்து கொண்டாா்.
சேலம் மாவட்டம், ஓமலூா் வட்டம், ஆா்.சி. செட்டிப்பட்டி பகுதியைச் சோ்ந்த வெற்றிவேல் மகன் இளம்சூரியன் (29). இவா், திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரியில் முதுநிலை (எம்.எஸ்.) மருத்துவப் படிப்பு இறுதியாண்டு படித்து வந்தாா்.
இன்னும் ஒரு சில மாதங்களில் பட்ட மேற்படிப்பு முடிவடைய உள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள விடுதியில் அவரது அறையில் இளம்சூரியன் தூக்கிட்ட நிலையில் தொங்கினாா்.
இதை பாா்த்த சக மாணவா்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் இறந்து விட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.