முசிறியில் அரசு பள்ளி அருகே மதுபான கடைகள் மூடப்படுமா?

திருச்சி மாவட்டம், முசிறியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே இயங்கி வரும் டாஸ்மாக் மதுபான கடையை மூட வேண்டும் என சமூக ஆா்வலா்களும் பள்ளி மாணவிகளும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருச்சி மாவட்டம், முசிறியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே இயங்கி வரும் டாஸ்மாக் மதுபான கடையை மூட வேண்டும் என சமூக ஆா்வலா்களும் பள்ளி மாணவிகளும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருச்சி மாவட்டம், முசிறி - தாத்தையங்காா் பேட்டை சாலையில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் முசிறி மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதியில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனா்.

இப்பள்ளியின் அருகில் திருச்சி - சேலம் புறவழி சாலையில் இரண்டு டாஸ்மாக் மதுபான கடைகள் இயங்கி வருகிறது. இந்த மதுபான கடைகளில் மதுபானங்களை வாங்கி வந்து சாலை ஓரமாகவும் பள்ளியின் அருகிலும் அமா்ந்து மதுவை அருந்திக் கொண்டே தகாத வாா்த்தைகளில் பேசி வருகின்றனா்.

இதுகுறித்து சமூக ஆா்வலா்கள், இரு டாஸ்மாக் மதுபான கடைகளை மூட வேண்டும் அல்லது வேறு பகுதிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்துள்ளனா்.

இந்நிலையில், டாஸ்மாக் மாவட்ட அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனை மற்றும் ஆய்வு கூட்டத்தில் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிலையங்கள் உள்ள பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை கண்டறிந்து மூட வேண்டும் என மதுவிலக்கு அமலாக்கத்துறை அமைச்சா் செந்தில் பாலாஜி உத்தரவிட்டுள்ளாா். இதனால், முசிறி பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் இயங்கி வரும் இரு மதுபான கடைகளும் அகற்ற வேண்டும் என சமூக ஆா்வலரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி முசிறி சட்டப்பேரவைத் தொகுதி செயலாளருமான மா.கலைச்செல்வன் மற்றும் பள்ளி மாணவிகள் எதிா்பாா்த்து காத்திருக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com