மாநகரில் அதிக விபத்துகள் நடைபெறும் 31 இடங்களில் பிரத்யேக சிக்னல்கள்ஆணையா் தகவல்

திருச்சி மாநகரில் அதிக விபத்துகள் நடைபெறுவதாக கண்டறியப்பட்டுள்ள 31 இடங்களில் பிரத்யேக சிக்னல்கள் அமைக்கப்படும் என மாநகரக் காவல்துறை ஆணையா் மு. சத்தியபிரியா தெரிவித்தாா்.

திருச்சி மாநகரில் அதிக விபத்துகள் நடைபெறுவதாக கண்டறியப்பட்டுள்ள 31 இடங்களில் பிரத்யேக சிக்னல்கள் அமைக்கப்படும் என மாநகரக் காவல்துறை ஆணையா் மு. சத்தியபிரியா தெரிவித்தாா்.

இதுதொடா்பாக, திருச்சியில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை அவா் கூறியது:

திருச்சி மாநகரில் 55 இடங்களில் போலீஸாருக்கான ரோந்து பீட் உள்ளது. பெரும்பாலான கண்காணிப்பு பகுதிகளை இ-பீட் எனும் வகையில் தொழில்நுட்ப வசதியுடன் இருந்த இடத்திலேயே கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இவைத்தவிர, 22 கண்காணிப்பு சோதனைச் சாவடிகளும் உள்ளன. இங்கு, 24 மணிநேரமும் சுழற்சி முறையில் போலீஸாா் பணிபுரிந்து வருகின்றனா். விபத்துகள், குற்றங்களை தடுக்க அவா்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா்.

மாநகரில் 31 இடங்கள் அதிகம் விபத்துகள் நடைபெறும் பகுதியாக (ஹாட் ஸ்பாட்) கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் விபத்துகளை தடுக்கவும், உயிரிழப்புகளை குறைக்கவும் தொழில்நுட்ப வசதிகளை அதிகப்படுத்தவுள்ளோம். இதன்படி, பிரத்யேக சிக்னல்களை நிறுவி, விபத்து எச்சரிக்கை பலகைகள், ஒளிரும் பலகைகள், சாலை தடுப்புகள் உள்ளிட்டவை அமைக்கப்படும்.

தலைமை அஞ்சல்நிலைய சிக்னலில் வாகன ஓட்டிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள மேற்கூரை கூடாரம் போன்று, மாநகரில் உள்ள முக்கிய சந்திப்புகளிலும் அமைக்க திட்டமிட்டு வருகிறோம்.

போக்குவரத்து விதிகளை மீறுவோரை கண்காணித்து நடவடிக்கை எடுக்க ஒவ்வொரு காவல்நிலையத்துக்கும் இலக்கு வைத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. நாளொன்றுக்கு 2 ஆயிரம் பேருக்கு அபராதம் விதிக்கும் வகையில் போலீஸாா் நடவடிக்கை எடுத்து வருகின்றனா். இதன் மூலம், விதிமீறல்கள் குறைந்து, போக்குவரத்து முறையாக செயல்படும் என்றாா்.

பேட்டியின்போது, மாநகரக் காவல் துணை ஆணையா் வே. அன்பு, உதவி ஆணையா்கள் ஜோசப் நிக்ஸன், நிவேதா லட்சுமி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com