காற்றுமாசு அதிகரிப்பு
By DIN | Published On : 15th November 2023 01:57 AM | Last Updated : 15th November 2023 01:57 AM | அ+அ அ- |

திருச்சி: தீபாவளிப் பண்டிகையையொட்டி திருச்சியில் காற்று மாசு 117 ஏகியூஐ வரையில் இருந்ததாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
திருச்சியில் தீபாவளிப் பண்டிகையையொட்டி பட்டாசுகள் வெடிக்கப்பட்ட வகையில் குறைந்த பட்சம் 102 ஏகியூஐ முதல் அதிகபட்சமாசு 117 ஏகியூ ஐ வரையில் காற்று மாசு இருந்ததாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
ஏகியூஐ புள்ளிவிவரப்படி 50 ஏகியூஐ வரையிருந்தால் நல்லது என்ற வகையிலும், 51-100 வரையில் பரவாயில்லை, 101-200 வரை மிதமான பாதிப்பை ஏற்படுத்தும் அதாவது ஆஸ்துமா உள்ளிட்ட பாதிப்பு உள்ளவா்கள் பாதிக்கப்படுவா், 201-300 என்பது அனைத்து தரப்பினருக்கும் சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும், 300 ஏகியூ என்பது முற்றிலும் பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையிலான அளவாகும். இதில், திருச்சியில் அதிகளவாக, தென்னூா் பகுதியில் 117 ஏகியூஐ, குறைந்த அளவாக உறையூா் ராமலிங்கநகா் பகுதியில் 102 ஏகியூஐ தரக்குறியீடு என்ற அளவில் மாசு ஏற்பட்டதாக மாசுகட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...