முசிறி: திருச்சி மாவட்டம் முசிறி மற்றும் பள்ளிநத்தம் பகுதியில் குட்கா புகையிலைப் போதைப் பொருள்கள் விற்ற இருவரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.
முசிறி காந்திநகா் பகுதி பெட்டிக் கடையில் போதை புகையிலை பொருள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸாா் சென்று நடத்திய சோதனையில், 7 பாக்கெட் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து பெ. தமிழ்ச்செல்வன் (62) என்பவரை கைது செய்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.
இதேபோல முசிறி அருகே பள்ளிநத்தம் பகுதி பெட்டிக்கடையில் ஜெம்புநாதபுரம் காவல் ஆய்வாளா் தண்டபாணி ஆய்வு மேற்கொண்டு 6 புகையிலை பாக்கெட் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து கடை உரிமையாளரான ச. பெரியண்ணன் (43) என்பவரை கைது செய்து விசாரிக்கிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.