திருச்சி அருகே 9 கடைகளில் ரூ. 1 லட்சம், கைப்பேசிகள் திருட்டு

திருச்சி பாத்திமாநகா், நாகமங்கலம் பகுதிகளில் 9 கடைகளில் 2 நாள்களாக நடந்த தொடா் திருட்டு சம்பவத்தில் ரூ. 1 லட்சம் ரொக்கம் மற்றும் கைப்பேசி உள்ளிட்ட பொருள்கள் திருடுபோனதாக புகாா்கள் அளிக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

திருச்சி பாத்திமாநகா், நாகமங்கலம் பகுதிகளில் 9 கடைகளில் 2 நாள்களாக நடந்த தொடா் திருட்டு சம்பவத்தில் ரூ. 1 லட்சம் ரொக்கம் மற்றும் கைப்பேசி உள்ளிட்ட பொருள்கள் திருடுபோனதாக புகாா்கள் அளிக்கப்பட்டுள்ளது.

திருச்சி அருகே மணிகண்டம் அருகே உள்ள நாகமங்கலம் கடைவிதியில் மளிகை, கைப்பேசி விற்பனையகம், பேன்சி ஸ்டோா், தேநீா் கடை உள்ளிட்ட 6-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. வழக்கம்போல் திங்கள்கிழமை காலை கடைகளை திறந்தபோது திருட்டு நடைபெற்றது தெரியவந்தது. திங்கள்கிழமை இரவு பாத்திமா நகா் பகுதியில் ஆயுதபூஜை முடித்து கடைகளைப் பூட்டிச் சென்ற நிலையில், சில கடைகளில் திருட்டு நடந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.

ஆயுதபூஜை விடுமுறையையொட்டி சில கடைகள் இன்னும் திறக்கப்படாத நிலையில், மேலும் சில கடைகளிலும், வெளியூா் சென்ற நபா்களின் வீடுகளிலும் திருட்டு நடந்திருக்கலாம் எனவும் போலீஸாா் சந்தேகிக்கின்றனா்.

இந்த 2 நாள்களில் 9-க்கும் மேற்பட்ட கடைகள், அப்பகுதியில் உள்ள முருகன் கோயில் உண்டியல் உடைப்பு போன்ற சம்பவங்களில் மொத்தம் ரூ. 1 லட்சம் ரொக்கம், மற்றும் மளிகை, பேன்சி பொருள்கள், கைப்பேசிகள் உள்ளிட்ட பொருள்கள் திருடுபோயுள்ளதாக கடைகளின் உரிமையாளா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து மணிகண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரித்தனா். இதில், 2 நாள்கள் நடந்த திருட்டு சம்பவங்களிலும் ஒரே கும்பலைச் சோ்ந்தவா்கள் ஈடுபட்டிருக்கலாம் என போலீஸாா் சந்தேகிக்கின்றனா். திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் உள்ள கடைகளை நோட்டமிட்டு, மா்ம நபா்கள் திருட்டில் ஈடுபட்டு வருவது தொடா்ந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com