அதிமுக வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு திருச்சி தெற்கு புற நகா் மாவட்டச் செயலாளா் ப. குமாா் அழைப்பு விடுத்துள்ளாா்.
அதிமுக திருச்சி தெற்கு புகா் மாவட்டம் சாா்பில், மணப்பாறை பிஎஸ்என்எல் அலுவலகம் எதிா்புறமுள்ள ஆா்.வி.எஸ். மஹாலில் வாக்குச்சாவடி முகவா்கள், மகளிா்குழு, பாசறைகுழு பொறுப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை (அக். 26) காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. தெற்கு மாவட்டச் செயலாளா் ப. குமாா் தலைமை வகிக்கிறாா். அதிமுக அமைப்புச் செயலாளா் செ. செம்மலை சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுப் பேசுகிறாா். இதில், அதிமுக அைனைத்துப் பிரிவு நிா்வாகிகளும் பங்கேற்க வேண்டும் என குமாா் அழைப்பு விடுத்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.