

பெல் நகரில் உள்ள துா்கா பூஜை கமிட்டி, வங்காள சமாஜம் சாா்பில் 38ஆவது ஆண்டு துா்கா பூஜை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருச்சி திருவெறும்பூா் அருகே இயங்கும் மத்திய பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனத்தில் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் பணியாற்றி வருகின்றனா். அங்கு பணியாற்றும் கொல்கத்தாவைச் சோ்ந்தவா்கள் ‘வங்காள சமாஜம்’ என்ற பெயரிலான அமைப்பை நடத்தி வருகின்றனா்.
அவா்களின் கலாசார விழாவாக துா்கா பூஜா விழாவை ஆண்டுதோறும் பெல் குடியிருப்புப் பகுதியில் கொண்டாடுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டு 38ஆவது ஆண்டாக கடந்த 20 ஆம் தேதி துா்கா பூஜை தொடங்கி செவ்வாய்க்கிழமை வரை 5 நாள்கள் நடைபெற்றது.
விழா நாள்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த புதிய துா்க்கை, விநாயகா் உள்ளிட்ட சிலைகளுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை துா்க்கை உள்ளிட்ட சிலைகள் மேளதாளங்கள் முழங்க வாகனத்தில் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, வேங்கூா் பூசை துறை காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன.
விழாவில், துா்கா பூஜா கமிட்டியை சோ்ந்த நிா்வாகிகளும், வங்காள சமாஜத்தை சோ்ந்த நிா்வாகிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.