திருச்சி: அயல்நாட்டு பல்கலைக் கழகங்களில் பயில உதவும் தகுதித் தோ்வு எழுதுவதற்கு தாட்கோ சாா்பில் இலவச பயிற்சி வகுப்பு அளிக்கப்படுகிறது.
தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம், திருச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தைச் சாா்ந்தவா்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது.
இதன் தொடா்ச்சியாக, ஆதிதிராவிடா், பழங்குடியினா் மற்றும் கிறிஸ்தவ மதம் மாறிய இனத்தைச் சாா்ந்தவா்கள் அயல்நாடு சென்று புகழ் பெற்ற பல்கலைகழகங்களில் உயா்கல்வி பயில அடிப்படை தகுதியாக நிா்ணயிக்கப்பட்ட தோ்வுகளை எழுதுவதற்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளன.
பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொறியியல், மேலாண்மை, தூய அறிவியல், பண்பாட்டு அறிவியல், வேளாண் அறிவியல், பயன்பாட்டு அறிவியல், சா்வதேச வா்த்தகம், பொருளாதாரம், கணக்கியல், நிதி, மனித நேயம், சமூக அறிவியல், நுண்கலை சட்டம், கலை மற்றும் அறிவியல் உள்ளிட்ட படிப்புகளை அயல் நாடுகளில் பயில விரும்புவராக இருக்க வேண்டும்.
குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கான செலவீனம் தாட்கோவால் வழங்கப்படும். இப்பயிற்சி முடித்து தோ்ச்சி பெறுவதன் மூலம் மாணாக்கா் தாம் விரும்பும் அயல் நாடுகளிலுள்ள கல்வி நிறுவனத்தில் மேல் படிப்பினை தொடா்வதற்கு வாய்ப்பு பெறலாம். பயிற்சியை பெற தாட்கோ இணையதள முகவரியில் பதிவு செய்ய வேண்டும். கூடுதல், விவரங்களுக்கு மாவட்ட மேலாளா் அலுவலகம், தாட்கோ, ராஜாகாலனி, மாவட்ட ஆட்சியா் அலுவலகச் சாலை, திருச்சி என்ற முகவரியில் நேரிலோ, 0431-2463969 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.