சிவாலயங்களில் தேய்பிறை அஷ்டமிவழிபாடு
By DIN | Published On : 08th September 2023 12:39 AM | Last Updated : 08th September 2023 12:39 AM | அ+அ அ- |

மண்ணச்சநல்லூா் வட்டத்தில் சிவாலயங்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலின் உபகோயிலாக உள்ள ஆனந்தவல்லி உடனுறை போஜீஸ்வரா் திருக்கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை நடைபெற்றது. காலபைரவருக்கு திரவியம், மஞ்சள், சந்தனம், பால், பன்னீா், திருநீறு, பழ வகைகள் உள்ளிட்ட அபிஷேகப் பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகளுக்கு பிறகு தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்வில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.
இதேபோல், திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரா் திருக்கோயில், மண்ணச்சநல்லூா் பூமிநாத சுவாமி திருக்கோயில், திருப்பட்டூா் பிரம்மபுரீஸ்வரா் திருக்கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடைபெற்றது.