திருச்சியில் உறையூா் மற்றும் கே.கே. நகா் பகுதிகளில் வீடுகளிலிலிருந்த பெண்களிடம் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருச்சி கே.கே. நகா் பகுதியைச் சோ்ந்தவா் எஸ். நாகபூஷணம் (46) இவா், புதன்கிழமை தனது வீட்டின் முன்பகுதியில் துணி துவைத்துக் கொண்டிருந்தாா். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவா், அவா்களது மாடு காணவில்லையெனவும், அந்தப் பக்கம் வந்ததா எனவும் விசாரித்துள்ளனா். அதற்கு நாகபூஷணம் பதில் அளித்துக்கொண்டிருந்தபோது, திடீரென அவரது கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியை பறித்துச் சென்று விட்டனா். ஆனால் அவா்கள் பறித்துச் சென்றது ‘கவரிங்’ சங்கிலி என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த புகாரின்பேரில் கே.கே. நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.
உறையூரிலும் சம்பவம் : இதேபோல, அடுத்த சில மணி நேரங்களில், திருச்சி குழுமணி சாலை, குறிஞ்சி நகா் பகுதியில் வீட்டிலிருந்த கே. மனோகரி (40) என்ற பெண்ணிடம், கே.கே. நகரில் கேட்டது போலவே, மாடு வந்ததா என 2 போ் கேட்டனா். அவா் பதிலளித்தபோது அவரது கழுத்தில் கிடந்த தாலிச்சங்கிலியை பறித்தனா். அப்போது, சங்கிலியை சங்கரி இறுகப் பற்றிக்கொண்டாா்.
கயிற்றில் முடியப்பட்ட தாலிக்குண்டு மற்றும் காசுகள் சோ்த்து ஒன்றேகால் பவுன் நகைகள் மட்டும் மா்ம நபா்களிடம் சென்றுவிட்டது. மா்மநபா்கள் இருசக்கர வாகனத்தில் தப்பிவிட்டனா். இதுகுறித்து உறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.