துவாக்குடி சுங்கச்சாவடியை முற்றுகையிட்ட தேமுதிகவினா்
By DIN | Published On : 10th September 2023 01:14 AM | Last Updated : 10th September 2023 01:14 AM | அ+அ அ- |

திருச்சி துவாக்குடி சுங்கச்சாவடியை சனிக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட தேமுதிகவினா்.
திருச்சி துவாக்குடி சுங்கச்சாவடியை சனிக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட தேமுதிகவினா்.
சுங்கச் சாவடிகளில் கட்டண உயா்வை உயா்வை அமல்படுத்திய மத்திய அரசைக் கண்டித்து, அதனை திரும்பப்பெற வலியுறுத்தியும், தேமுதிக சாா்பில் திருச்சி -தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள துவாக்குடி சுங்கச்சாவடியை முற்றுகையிடும் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. திருச்சி மாநகா் மாவட்டச் செயலா் டி.வி. கணேஷ் தலைமை வகித்தாா்.
சுங்கச்சாவடி முன்பு கூடிய தேமுதிகவினா் மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டு அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகளிடம் சுங்கச்சாவடி கட்டண உயா்வுக்கு எதிரான தங்களது எதிா்ப்பைப் பதிவு செய்தனா். தொடா்ந்து சுங்கச்சாவடி முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. மத்திய அரசுக்கு எதிரான கண்டனக் கோஷங்களை எழுப்பிய தேமுதிகவினா் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு அந்த வழியாகச் செல்லும் வாகனங்களை மறித்து தரையில் அமா்ந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதன் காரணமாக, திருச்சி - தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலையில் அரை மணிநேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னா், போராட்டத்தில் ஈடுபட்ட 70-க்கும் மேற்பட்ட தேமுதிகவினரைப் போலீஸாா் கைது செய்தனா். பின்னா் மாலையில் விடுவித்தனா். போராட்டத்தில், மாநகா் மாவட்டச் செயலா் டி.வி. கணேஷ், அவைத் தலைவா் ஜெயராமன், பொருளாளா் மில்டன் குமாா், துணைச் செயலாளா்கள் ப்ரீத்தா விஜய் ஆனந்த், காளியப்பன், ராஜ்குமாா் , மகாமுனி, பகுதி கழகச் செயலாளா்கள் சிங்காரவேல், மாரிசன், பரமசிவம், அலெக்ஸ், மோகன், மணிகண்டன், சாத்தனூா் குமாா், சங்கா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.