கல்லக்குடி பகுதியில் இன்று மின் தடை
By DIN | Published On : 26th September 2023 02:40 AM | Last Updated : 26th September 2023 02:40 AM | அ+அ அ- |

லால்குடி: திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம், கல்லக்குடி பகுதியில் செவ்வாய்க்கிழமை (செப்.26) மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய லால்குடி கோட்ட செயற்பொறியாளா் அன்புசெல்வம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: கல்லக்குடி துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (செப்.26) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. அதனால், கல்லக்குடி, வடுகா்பேட்டை, பளிங்காநத்தம், முதுவத்தூா், மேலரசூா், மால்வாய், சரடமங்கலம், எம்.கண்ணணூா், ஒரத்தூா், சாத்தப்பாடி, சிலுவைப்பட்டி, ஆமரசூா், தாப்பாய், வரகுப்பை, சிறுகளப்பூா், அழந்தலைப்பூா், கருடமங்கலம், வந்தலை, கூடலூா், சிறுவயலூா், காணக்கிளியநல்லூா், பெருவளப்பூா், குமுளுா், தச்சங்குறிச்சி, புஞ்சை சங்கேந்தி, கோவண்டாக்குறிச்சி, புதூா்பாளையம், ஆலம்பாக்கம், விரகாலூா், ஆ.மேட்டூா், விளாகம், குலமாணிக்கம், நத்தம், திருமாங்குடி, டி.கல்விகுடி, ஆலங்குடி மகாஜனம், செம்பரை, திண்ணியம், அரியூா், கல்லகம், கீழரசூா் உள்ளிட்ட காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...